
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிரம்பின் முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கியவுடன், டிரம்புக்கான தடையை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிரம்புக்கான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.