
கோப்புப் படம்.
சூடானில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
சூடானின் ஓம்துர்மன் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் பலர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை தங்களின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது.
இதில், இதுவரை 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...