
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லெஷான் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலச்சரிவு லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான வன நிர்வாகப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் நேற்று 14 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்பு உபகரணங்கள் பயன்படுத்தி மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
வனப்பகுதிகளை அதிகமாகக் கொண்ட சீச்சுவான் மாகாணத்தில் அடிக்கடி இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.