பிற உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை! வரலாற்று அதிசயம்!!

அமெரிக்காவில் பிற உயிரின் உதவியின்றி முதலை ஒன்று முட்டையிட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
பிற உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை! வரலாற்று அதிசயம்!!

அமெரிக்காவில் பிற உயிரின் உதவியின்றி முதலை ஒன்று முட்டையிட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டைனோசர்ஸ் போன்ற உயிரினங்களுக்குப் பிறகு தற்போது பெண் முதலை ஒன்று தானாகவே முட்டையிட்டுள்ளது குறித்து விலங்கியல் வல்லுநர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். 

மருத்துவத் துறையில், பிற உயிரின் பாலியல் ரீதியான உதவியின்றி தானாகவே கர்ப்பமாகும் முறைக்கு ஃபேகல்டேடிவ் பார்தினோஜெனிசிஸ் (facultative parthenogenesis) எனப்படுகிறது. 

இந்த முறையில் சில பறவைகள், பல்லி, மற்றும் பாம்பு வகைகள் கருவுற்று புதிய உயிரினங்களைத் தோற்றுவிப்பதாக அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் முதலை பிற உயிரின் எந்த உதவியுமின்றி கருவுற்று முட்டையிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விர்ஜினா தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆமைகள், முதலைகளின் கருவுறுதல் முறை குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, இந்த உயிரினங்களில் போதுமான அளவு பாலியல் குரோமோசோம்கள் இல்லை என்றும், அவற்றின் பாலியல் தேவைக்கான தீர்வை உடலின் வெப்பம் மூலம் கட்டுப்படுத்துவதாகவும், அதில் முட்டையிட்டு குஞ்சுபொறிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். 

பிற உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை குறித்து ஆராய்ச்சி நடத்தி பையாலஜி லெட்டர் ஜர்னல் மாத இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆராய்ச்சி 2018ஆம் ஆண்டுமுதல் கடந்த 16 ஆண்டுகளாக தனித்து வைக்கப்பட்டுள்ள முதலை கருவுற்றதை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களின் தரவுகளின்படி, இந்த அறிக்கையே எந்த உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை குறித்த முதல் ஆவணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com