சூடான் அவலம்: காப்பகத்திலிருந்த 71 குழந்தைகள் பலி; 300 குழந்தைகள் மீட்பு

ள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடானிலில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 71 குழந்தைகள் பலியான நிலையில் 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
சூடான் அவலம்: காப்பகத்திலிருந்த 71 குழந்தைகள் பலி; 300 குழந்தைகள் மீட்பு

கெய்ரோ: ராணுவமும் துணை ராணுவமும் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருவதால், உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடானிலில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 71 குழந்தைகள் பலியான நிலையில் 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

சூடான் தலைநகர் கெய்ரோவில் இருந்த குழந்தைகள் காப்பகத்தில், உள்நாட்டு கலவரத்தால் ஏப்ரல் மாதத்திலிருந்து உணவு கிடைக்காமல் காய்ச்சலுக்குக் கூட சிகிச்சை அளிக்கப்படாததால் 71 குழந்தைகள் பலியாகின. இந்த நிலையில், யுனிசெஃப் தலையிட்டு, காப்பகத்திலிருந்த 300 குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

கடந்த மாதம் பல சர்வதேச நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக மாறியது இந்த குழந்தைகள் காப்பகம். இந்த காப்பகத்துக்கு வெளியே நடைபெற்று வந்த மிக மோசமான சண்டை காரணமாக, இந்த காப்பகத்துக்கு உணவுப்பொருள்கள் கிடைப்பது நிறுத்தப்பட்டது.

இந்த காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட 300 குழந்தைகளும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com