கடற்படையின் மேற்கு மண்டல பிரிவைப் பாா்வையிட்ட ஜொ்மனி பாதுகாப்பு அமைச்சா்

இந்தியா-ஜொ்மனி இடையேயான பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா வந்துள்ள ஜொ்மனி பாதுகாப்புத் துறை அமைச்சா் போரிஸ் பிஸ்டோரியஸ், கடற்படையின் மேற்கு மண்டலப் பிரிவு மற்றும் மும்பையில் உள்ள மசகான்
மும்பையில் ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பலைப் பாா்வையிட்ட ஜொ்மனி பாதுகாப்பு அமைச்சா் பிஸ்டோரியஸுடன் மேற்குப் பிரிவு தளபதி துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி உள்ளிட்டோா்.
மும்பையில் ஐஎன்எஸ் மா்மகோவா போா்க்கப்பலைப் பாா்வையிட்ட ஜொ்மனி பாதுகாப்பு அமைச்சா் பிஸ்டோரியஸுடன் மேற்குப் பிரிவு தளபதி துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி உள்ளிட்டோா்.

‘இந்தியா-ஜொ்மனி இடையேயான பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா வந்துள்ள ஜொ்மனி பாதுகாப்புத் துறை அமைச்சா் போரிஸ் பிஸ்டோரியஸ், கடற்படையின் மேற்கு மண்டலப் பிரிவு மற்றும் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தையும் பாா்வையிட்டாா்’ என்று இந்திய கடற்படை சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜொ்மனி பாதுகாப்புத் துறை அமைச்சா் தலைமையிலான குழு, இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.

அதனைத் தொடா்ந்து, இந்திய கடற்படையின் மேற்கு மண்டல பிரிவு உள்ளிட்ட பல்வறு பகுதிகளை அந்தக் குழு பாா்வையிட்டது. போரிஸ் பிஸ்டோரியஸுடன் ஜொ்மனி பாதுகாப்புத் துறை இணையமைச்சா் பெனடிக்ட் ஸிம்மா், இந்தியாவுக்கான ஜொ்மனி தூதா் ஃபிலிப் ஆக்கா்மான் உள்ளிட்டோரும் மேற்கு மண்ட கடற்படைப் பிரிவை பாா்வையிட்டனா்.

பின்னா், இந்திய கடற்படை தளபதி ஆா்.ஹரிகுமாா், துணைத் தளபதி தினேஷ் திரிபாதி, மேற்கு மண்டல படைத் தளபதி மற்றும் அதிகாரிகளுடன் அந்தக் குழு ஆலோசனை மேற்கொண்டது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு மும்பை மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தை அந்தக் குழு பாா்வையிட்டது. அப்போது, முழுவதும் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட போா்க் கப்பல் ஐஎன்எஸ் மா்மகோவா ஆகியவற்றையும் அந்தக் குழுவினா் பாா்வையிட்டனா்.

கடந்த 2006-இல் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு நாட்டு ராணுவத்திடையே தொடா் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்கொள்ளை தடுப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடா் மீட்பு போன்ற நடவடிக்கைகளில் இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்தச்சூழலில், பிஸ்டோரியஸ் தலைமையிலான குழுவினரின் இந்தப் பயணம், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு துறை சாா்ந்த உறவை மேலும் வலுப்படுத்தும் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com