
சூடானில் நிகழும் வன்முறையிலிருந்து தப்பிக்க எத்தியோப்பியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 41,200ஐத் தாண்டியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
ஜூன் 6-ம் தேதி வரை சூடானில் இருந்து சுமார் 41,200 பேர் அகதிகளாக எத்தியோப்பியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
நாளொன்றுக்கு சுமார் 700 முதல் 1000 பேர் வரை புகலிடம் தேடி வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
படிக்க: பதிவுகளை அழித்து இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய கஜோல்!
கடந்த ஏப்ரல் 15 முதல் தலைநகரான கார்ட்டூம் மற்றும் பிற பகுதிகளில் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகின்றது.
இந்த மோதலில் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். சுமார் 1.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...