
பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
பிலின்பின்ஸ் தீவின் தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கி.மி தொலைவில் அமைந்துள்ள ஹூக்கே நகர் அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இது பூமிக்கு அடியில் 120 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
படிக்க: தலைநகரம் - 2 வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்த நிலநடுக்கம் பிலிப்பின்ஸின் சில பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் போன்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.