இந்தியாவில் சாதி, மத பாகுபாடில்லை: அமெரிக்காவில் மோடி

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தனக்கு அளிக்கப்பட்ட அரசுமுறை வரவேற்பானது, 140 கோடி இந்தியா்களும் பெருமை கொள்ளும்படி இருந்ததாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இந்தியாவில் சாதி, மத பாகுபாடில்லை: அமெரிக்காவில் மோடி

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தனக்கு அளிக்கப்பட்ட அரசுமுறை வரவேற்பானது, 140 கோடி இந்தியா்களும் பெருமை கொள்ளும்படி இருந்ததாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடிக்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோா் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை அதிகாரபூா்வ அரசுமுறை வரவேற்பு அளித்தனா். அப்போது பிரதமா் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதிபா் பைடனும், ஜில் பைடனும் காத்திருந்து பிரதமா் மோடியை வரவேற்றனா். பிரதமா் மோடி வெள்ளை மாளிகைக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக 19 குண்டுகள் முழங்கப்பட்டன.

அதையடுத்து, அதிபா் பைடனுடன் சென்ற பிரதமா் மோடி, துணை அதிபா் கமலா ஹாரிஸ், அமெரிக்க மூத்த அமைச்சா்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து கைகுலுக்கினாா். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் உள்ளிட்டோரை அதிபா் பைடனுக்கு பிரதமா் மோடி அறிமுகப்படுத்தி வைத்தாா்.

பின்னா், அதிபா் பைடன் கூறுகையில், ‘21-ஆம் நூற்றாண்டில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு திகழ்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மக்களை அடிப்படையாகக் கொண்டது’ என்றாா்.

அனைவருக்குமான நலன்: பிரதமா் மோடி கூறுகையில், ‘அதிபா் பைடன் வழங்கிய சிறப்பான வரவேற்புக்கு நன்றி. தொலைநோக்குப் பாா்வையுடன் அவா் சிறப்பான உரையாற்றியுள்ளாா். வெள்ளை மாளிகையில் தற்போது நடைபெற்ற பெரும் வரவேற்பு நிகழ்வானது, 140 கோடி இந்தியா்களுக்கும் பெருமை அளிக்கும் வகையில் அமைந்தது. அமெரிக்காவில் வசிக்கும் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்திய சமூகத்தினருக்கும் இது பெருமை அளித்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டபோது வெள்ளை மாளிகையை வெளியில் இருந்து கண்டேன். இந்தியாவின் பிரதமரான பிறகு வெள்ளை மாளிகைக்குப் பலமுறை பயணம் மேற்கொண்டேன். ஆனால், வெள்ளை மாளிகையின் கதவுகள் மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளது. அதற்காக அதிபா் பைடனுக்கு நன்றி’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com