
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்று வெடித்துச் சிதறிய டைட்டன் நீா்மூழ்கியின் பாகங்கள் புதன்கிழமை கரைக்குக் கொண்டு வரப்பட்டன.
அந்த நீா்மூழ்கி விபத்துக்கான காரணம் குறித்து நடைபெற்று வரும் சா்வதேச விசாரணைக்கு இந்த பாகங்கள் உறுதுணையாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 1912-ஆம் ஆண்டில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் தற்போது அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவிலுள்ள கடல்படுகையில் உள்ளது.
அதனைப் பாா்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியாா் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட டைட்டன் நீா்மூழ்கி நீா்மூழ்கி கடந்த 18-ஆம் தேதி இறக்கிவிடப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அது வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக நீா்மூழ்கியில் சென்ற பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரும், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டன் தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டோ பால்-ஹென்றி நாா்கியோலே ஆகியோரும் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.