மக்கள் உண்ண உணவில்லை.. ஆனால் பாகிஸ்தான் என்ன வாங்குகிறது பாருங்கள்!

மக்கள் உண்ண உணவின்றி கோதுமை மாவுக்காகவும், பருப்பு, மருந்து பொருள்களை வாங்கவும் நீண்ட வரிசைகளில் கால் கடுக்க காத்திருக்கிறார்கள்.
மக்கள் உண்ண உணவில்லை.. ஆனால் பாகிஸ்தான் என்ன வாங்குகிறது பாருங்கள்!
மக்கள் உண்ண உணவில்லை.. ஆனால் பாகிஸ்தான் என்ன வாங்குகிறது பாருங்கள்!


இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஒருபக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மக்கள் உண்ண உணவின்றி கோதுமை மாவுக்காகவும், பருப்பு, மருந்து பொருள்களை வாங்கவும் நீண்ட வரிசைகளில் கால் கடுக்க காத்திருக்கிறார்கள்.

ஆனால், பாகிஸ்தான் அரசு, தனது பொது பட்ஜெட்டில், ஆயுதங்கள் வாங்குவதற்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாக ஆஃப்கன் புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு ஊடகம் குற்றம்சாட்டியிருக்கிறது.

பாகிஸ்தானில் நடந்த பல முக்கிய தவறுகளுக்குக் காரணமாக இருக்கும் அந்நாட்டு ராணுவமோ, மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதைக் கொண்டு கொழுத்துவிட்டிருக்கிறது என்றும் அந்த ஊடகம்மேற்கோள் காட்டுகிறது.

நாட்டில் மிகக் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், அந்நாட்டின் பாதுகாவலாக இருக்க வேண்டிய பாகிஸ்தான் ராணுவம், ஒவ்வொரு ஆண்டும் அதற்கான 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியை நாட்டுக்காக பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றுவோருக்கு நிலம், வீடுகள் மற்றும் இதர சலுகைகள் ஒரு சல்லிக்காசும் குறையாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதற்காக பாகிஸ்தான் பட்ஜெட்டில் மிகப்பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 - 23 பட்ஜெட்டில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு 7.5 பில்லியன் டாலர் நிதி தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இது பாகிஸ்தான் நாட்டு மக்களின் மீது மேலும் அதிகப்படியான வரிச்சுமையை செலுத்தவே வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

2020ஆம் ஆண்டு 92 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை பாகிஸ்தான் ராணுவம் வாங்கிய நிலையில், இது 2021ஆம் ஆண்டு 263 மில்லியன் டாலர்களாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com