‘புழு மழை’யால் தத்தளித்த சீனா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விடியோ!

சீனாவில் இருந்து ஒரு வினோதமான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
‘புழு மழை’யால் தத்தளித்த சீனா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விடியோ!


பெய்ஜிங்: சீனாவில் இருந்து ஒரு வினோதமான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் தலைநகர் பெய்ஜிங்கில் அண்மையில் பெய்த மழையில் புழுக்களும் சேர்ந்து விழுந்ததால் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக குடைகளைப் பிடித்தவாறு பொதுமக்கள் சாலைகளில் செல்கின்றனர்.

சீனா தலைநகர் பீஜிங்கில் அண்மையில் பெய்த மழையில் சிறிய புழுக்கள் சேர்ந்து விழுவதை விடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன. சாலைகளில் செல்லும் குடியிருப்புவாசிகள் குடைகளை விரித்து பிடித்தவாறு செல்லும்போது, அந்த புழுக்கள் சாலைகளில் திரிவதை காண்டவாறு செல்கின்றனர்.

மேலும், சாலையோரங்களில் நிற்கவைக்கப்பட்டுள்ள கார்கள், வாகனங்களில் தண்ணீருடன் புழுக்களும் மிதந்து செல்வதை அந்த விடியோவில் பார்க்க முடிகிறது.

இதுவரை இந்த வினோதமான மழைப்பொழிவுக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. இந்த வினோதமான புழுக்கள் மழைப்பொழிவு குறித்து சீன அரசு தரப்பில் எந்தவித விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை அடுத்து பலர் தங்களது கருத்துகளை வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர். 

இதனிடையே சீன பத்திரிகையாளர் ஒருவர் இந்த விடியோ போலியானது. ஏனெனில் பெய்ஜிங்கில் தற்போது மழை பெய்ததாக எதுவும் பதிவாகவில்லை என கூறியுள்ளார்.

ஆனால், மதர் நேச்சர் நெட்வொர்க் என்ற அறிவியல் இதழ், பலத்த காற்றால் விலங்குகளில் இருந்து இதுபோன்ற புழுக்கள் அடித்துவரப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.

பூச்சிகள் சுழலில் சிக்கிக் கொள்ளும் போது ஏற்படும் புயல்கள் காரணமாக இது போன்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புழுக்கள் உண்மையில் பாப்லர் பூக்கள் என்றும், துலிப் மரத்தின் பூக்கள் செம்மண் மிருகங்களை ஒத்திருக்கும் என்று மற்றொரு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com