உலகின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் முன்னணியில் சிங்கப்பூர்

உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் நாட்டின் ஷாங்கி விமானநிலையம் முதலிடம் பெற்றுள்ளது. 
உலகின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் முன்னணியில் சிங்கப்பூர்

உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் நாட்டின் ஷாங்கி விமானநிலையம் முதலிடம் பெற்றுள்ளது. 

கரோனா தொற்றுக்குப் பிறகு விமான பயணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு விமான நிறுவனங்களும் பயணிகளை ஈர்க்க புதிய புதிய சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடிராக்ஸ் எனும் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் தலைசிறந்த விமானநிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் ஷாங்கி விமானநிலையம் முதலிடம் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து தோஹா விமானநிலையமும், டோக்கியோவின் ஹனீடா விமான நிலையமும், சியோலின் இங்கியோன் விமான நிலையமும், பாரீஸின் சார்லஸ் டி கெல்லி விமானநிலையமும் இடம் பெற்றுள்ளன. 

இவைகளைத் தொடர்ந்து இஸ்தான்புல், முனிச்,  சூரிச், நரிட்டா உள்ளிட்ட விமான நிலையங்கள் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் தில்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையம் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com