
சூடானில் இருந்து மேலும் 231 பயணிகள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர்.
ராணுவ-துணை ராணுவப் படை மோதலால் பாதிக்கப்பட்டுள்ள சூடானிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆப்ரேஷன் காவேரி என்ற நடவடிக்கையின் கீழ் சூடானில் உள்ள இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
சூடானில் இருந்து சௌதியின் ஜெட்டா நகருக்கு வந்து பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு வருகின்றனர்.
இந்நிலையில் சூடானில் உள்ள மேலும் 231 இந்தியர்கள் செவ்வாய்க்கிழமை காலை குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்தனர். இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது.
மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகா் காா்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம், போா்ட் சூடான், ஜெட்டா ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளை இந்தியா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...