
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அமைச்சா் ஒருவரை அவரது பாதுகாவலா் சுட்டுக் கொன்றாா்.
இது குறித்து ராணுவம் தெரிவித்துள்ளதாவது: அதிபா் யோவெரி முசேவெனி தலைமையிலான அரசில், தொழிலாளா் நலத்துறை இணையமைச்சராக இருந்து வந்த சாா்லஸ் எங்கோலாவை அவரது பாதுகாவலா் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றாா்.
பின்னா் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவா், இறுதியில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து உடனடியாக தகவல் இல்லை. இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது தொடா்பான முழு விவரங்களும் பொதுமக்களுடன் பகிா்ந்துகொள்ளப்படும் என்று ராணுவம் தெரிவித்தது.
இணைமைச்சரை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்துகொண்ட பாதுகாவலா் குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.