
பிரிட்டனில், முதல் முறையாக மூன்று பேரின் மரபணுக்களின் கூட்டணியில் ஐவிஎஃப் முறையில் உருவான குழந்தை பிறந்துள்ளது.
ஒரு பெண்ணின் கரு முட்டைகளிலிருந்து கருவை எடுத்து (அது ஒரு டிஎன்ஏவை உள்ளடக்கியது), கருமுட்டை தானமளிப்பவரின் கருமுட்டையிலிருந்து ஆரோக்கியமான மைட்டோகாண்டிரியல் டிஎன்ஏவைத் தக்கவைத்துக் கொண்டு, ஒரு நல்ல ஆரோக்கியமான கருமுட்டையை ஐவிஎஃப் முறையில் உருவாக்கி ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது.
உலகளவில் இதுவரை 98.8 சதவீத குழந்தைகள், பெற்றோராகிய இரண்டு பேரின் டிஎன்ஏக்களை மட்டுமே கொண்டிருப்பார்கள். முதல் முறையாக, பிரிட்டனில், மூன்று பேரின் டிஎன்ஏக்களைக் கொண்டு குழந்தை உருவாக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே, இதுபோன்ற முறையில் மெக்ஸிகோவில் குழந்தை பிறந்திருப்பதாகவும், மரபணு கோளாறு உள்ள தாய்க்கு, இந்த முறையில் குழந்தைப் பேறு கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...