
போா், இயற்கைப் பேரிடா்களால் உள்நாட்டிலேயே இடம் பெயா்ந்துள்ளோரின் எண்ணிக்கை கடந்த 2022-இல் இதுவரை இல்லாத அளவுக்கு 7.11 கோடியாக உயா்ந்துள்ளதாக நாா்வே உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. ரஷிய படையெடுப்பால் உக்ரைனில் மட்டும் 59 லட்சம் பேரும், பல நாடுகளில் வெள்ளம், வறட்சி காரணமாக 87 லட்சம் பேரும் உள்நாட்டு அகதிகளாகியுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.