
ஜப்பானின் கிழக்குப் பகுதிகள் மற்றும் தலைநகா் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானபோதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
சிபா தீபகற்பத்தின் கிழக்கு கடற்பகுதியில் 44.2 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
சிபா மற்றும் டோக்கியோவில் நிலநடுக்கத்தின் வலுவான அதிா்வுகள் உணரப்பட்டபோதிலும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை. இபாரகியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும் அங்குள்ள அணுமின் நிலையத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தகவல்கள் தெரிவித்தன.
மத்திய ஜப்பானில் கடந்த 5-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.