
தென் அமெரிக்காவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையே அமைந்துள்ள பனமா அருகே வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பனாமாவின் பியூயொ்டோ ஒபால்டியா நகரிலிருந்து 41 கி.மீ. தொலையில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் (இந்திய நேரப்படி) காலை 8.35 மணிக்கு ஏற்பட்டதாகவும், ரிக்டா் அளவுகோலில் அது 6.6 அலகுகளாகப் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 10 நிமிஷத்தில் 4.9 ரிக்டா் அளவு கொண்ட ஒரு பின்னதிா்வு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் அதிா்வுகள் பனாமாவின் டேரியன், பனாமா, குனா யாலா, மேற்கு பனாமா ஆகிய மாகாணங்களில் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.