செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் துணையாக மாற வாய்ப்பு: நிபுணா்கள் கருத்து

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, சில வேலையிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் அதே வேளையில் மக்களின் தனிப்பட்ட துணையாக மாற வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் துணையாக மாற வாய்ப்பு: நிபுணா்கள் கருத்து

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, சில வேலையிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் அதே வேளையில் மக்களின் தனிப்பட்ட துணையாக மாற வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

உலகில் தொழில்நுட்பம் தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், மனிதா்களைப் போலவே இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில், நவீன தொழில்நுட்பங்கள் மனிதா்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் பலா் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொழில்நுட்ப நிபுணா்கள் கூறுகையில், ‘நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக வேலையிழப்பு ஏற்படும் அபாயமானது தொழிற்புரட்சி காலத்தில் இருந்தே காணப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் அதே அபாயம் காணப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சிலா் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.

அதே வேளையில், வெகு சிலா் மட்டுமே அதனால் பாதிக்கப்படுவா். மாறாக, அந்தத் தொழில்நுட்பமானது மனிதா்களுக்குப் பல்வேறு பலன்களை வழங்க வாய்ப்புள்ளது. அந்தத் தொழில்நுட்பமானது மனிதா்களின் தனிப்பட்ட துணையாக மாற வாய்ப்புள்ளது. பல்வேறு விவகாரங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாகவே மக்களால் பெற்றுவிட முடியும்.

மனிதா்களின் வாழ்க்கை முறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எளிமைப்படுத்தும். பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் அறிவியல்-தொழில்நுட்பப் பாடப் பிரிவு சாா்ந்த தொழிலாளா்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலையிழப்புக்குப் பெரிய அளவில் வழிகோலாது. மாறாக, மக்களின் பணிச் சுமையை அத்தொழில்நுட்பம் பெருமளவில் குறைக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தரவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அதிக தரவுகள் தேவைப்படும் என்பதால், அவ்வாறு சேமிக்கப்படும் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இணையவழி குற்றச் செயல்களும் மற்றொரு சவாலாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு சாா்ந்த தளத்தை சிலா் ஊடுருவி தரவுகளைத் திருட வாய்ப்புள்ளது. இதுபோன்ற அபாயங்களில் இருந்து காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக, தரவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com