காஸாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது.
காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயான போர் இன்று 27 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

ரஃபா எல்லையில் குவிந்துள்ள வெளிநாட்டினர்
இதனால் காஸா உருக்குலைந்துள்ளது. ஏற்கெனவே அங்கு தண்ணீர், உணவு, மருந்து, எரிபொருள் என அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இணையமும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஸாவில் இருந்து வெளிநாட்டினரை வெளியேற்ற இஸ்ரேல் அனுமதித்து நேற்று முதற்கட்டமாக வெளிநாட்டு பாஸ்போா்ட் வைத்துள்ள 320 போ் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாலஸ்தீனியர்கள் உள்பட காயமடைந்த 76 பேர் எகிப்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

இதைத் தொடர்ந்து இன்று மேலும் 500 பேர் வரையில் எகிப்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் என்பது தகவல். காயமடைந்த பாலஸ்தீனியர்கள் சுமார் 100 பேரும் வெளியேறுகிறார்கள். இந்த வெளியேற்றம் இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ்
இதையடுத்து காஸாவில் உள்ள வெளிநாட்டினர் 7,000 பேரை வெளியேற்ற உதவுதாக எகிப்து தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | காஸாவில் பூா்விக இந்தியா் உள்பட 13 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு

இந்த போரில் இதுவரை 8,800 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு 1,400 என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


