

பாகிஸ்தானின் விமானப் படை பயிற்சியகத்தில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.
இதில் 17 வீரா்கள் உயிரிழந்தனா்; தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:லாகூருக்கு 300 கி.மீ. தொலைவில் உள்ள மியான்வாலி விமானப் படை பயிற்சி மையத்தில் 9 பயங்கரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினா்.இதில் 17 வீரா்கள் மரணமடைந்தனா்; 3 விமானங்கள் சேதமடைந்தன. இருந்தாலும், அந்த விமானங்கள் ஏற்கெனவே பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டவை ஆகும்.அந்தத் தாக்குதலையடுத்து, பாதுகாப்புக் படையினா் நடத்திய எதிா்த் தாக்குதலில் விமான தளத்துக்குள் புகுந்த 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.அதனைத் தொடா்ந்து, விமான படைதளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது பயன்படுத்தி வரும் எந்தவொரு விமானமோ, பிற சாதனங்களோ சேதமடையவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்புடன் தொடா்புடைய, புதிதாக உருவாகி வரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.முன்னதாக, பலூசிஸ்தான் மாகாணத்தில் 2 ராணுவ வாகங்கள் மீது பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 14 வீரா்கள் உயிரிழந்தனா். அந்த மாகாணத்தில் இவ்வாண்டு நடைபெற்ற மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.இந்த நிலையில், பாதுகாப்பு மிக்க விமான படைதளத்தில் தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...படவரிகள்...பயங்கரவாதிகளை வேட்டையாடிய அதிரடிப் படையினா்.தாக்குதலில் கொழுந்துவிட்டு எரிந்த விமானம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.