ஹமாஸ் படை - பாலஸ்தீன மக்கள்: வேறுபடுத்திப் பார்க்க இஸ்ரேலுக்கு அறிவுறுத்தல்!

ஹமாஸ் படையினரையும் பாலஸ்தீன மக்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
வேதாந்த் பட்டேல்
வேதாந்த் பட்டேல்


ஹமாஸ் படையினரையும் பாலஸ்தீன மக்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு மாதமாக போர் நீடித்து வருகிறது. அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலால், 4,237 குழந்தைகள் உள்பட 10,300 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல், ஹமாஸ் படையினருக்கும், பாலஸ்தீன குடிமக்களுக்கும் இடையில் இஸ்ரேல் வேறுபாடு காண வேண்டியது அவசியம். 

போரின்போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் காக்கப்பட வேண்டும் என்று எடுக்கப்பட்ட உறுதிமொழியை காக்க வேண்டும். இதனை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். 

மீண்டும் வலுபெற முடியாத அளவுக்கு இஸ்ரேல் கட்டமைப்பு சிதைக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகளை காஸா எல்லைக்குள் அனுமதித்தால், இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்க வாய்ப்புள்ளது. காஸாவுக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதை இஸ்ரேல் தடுக்காமல் இருக்க வேண்டும் என்பதே இப்போது நாங்கள் விரும்பும் நிலையாக உள்ளது. இதன்மூலம், இஸ்ரேலிலிருந்து பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டினரை ஹமாஸ் படையினர் விடுவிக்கும் சூழல் ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com