
காஸாவில் பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் இஸ்ரேல் பயன்படுத்தி வரும் நாசகார ஆயுதங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் வோல்கா் துருக் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. குறிப்பாக, மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த பகுதிகளில் கூட அதிக நாசத்தை விளைவிக்கக்கூடிய ஏவுகணைகள் வீசப்படுகின்றன.
இது, அந்தப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி, மனித அடிப்படை உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கிறது. எனவே, இஸ்ரேல் பயன்படுத்தும் நாசகார ஆயுதங்கள் விசாரணைக்கு உள்படுத்தப்படவேண்டும்.
பொதுமக்கள் மீது அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானதாகும்.
பாலஸ்தீன ஆயுதக் குழுவினா் (ஹமாஸ்) பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்துவது போா் நியதிகளுக்கு எதிரானதுதான். எனினும், இதனைக் காரணம் காட்டி பொதுமக்கள் படுகொலையை இஸ்ரேல் நியாயப்படுத்த முடியாது என்றாா் துருக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.