லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது இஸ்ரேல்

மும்பை தாக்குதலின் 15-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது இஸ்ரேல்.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது இஸ்ரேல்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

160-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலின் 15-வது ஆண்டு நினைவுநாளையொட்டி, அந்த தாக்குதலை நடத்திய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசு வலியுறுத்தாமலேயே இந்த நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்திருப்பதாகவும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சட்டவிரோத பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2008 நவம்பர் 26-ஆம் நாள் இந்தியாவின் மும்பையில் நூற்றுக்கணக்கானோரை கொன்று குவித்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பானது மிகக் கொடூரமானது என்றும் தெரிவித்துள்ளது. 

2008 நவம்பர் 26-ஆம் நாள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பத்து பயங்கரவாதிகள் கடல்வழியாக தெற்கு மும்பைக்குள் நுழைந்து பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். 

இந்த திடீர் தாக்குதலில் 18 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 166 இந்தியர்கள் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com