காஸாவில் 4 நாள்கள் போர் நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
காஸாவில் 4 நாள்கள் போர் நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பொதுமக்கள்.

அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினா் காஸாவுக்குள் கடத்திச் சென்றனா்.

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் படையினர், பாலஸ்தீன மக்கள் உள்பட 13,300 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சூழலில், ஹமாஸ் படையினர் கடத்திச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையை கத்தார் நாட்டின் தலைமையில் இஸ்ரேல் மேற்கொண்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் படையினர் -  இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்ட செய்தி:

“பிணைக் கைதிகளை மீண்டும் தாயகம் அழைத்து வர இஸ்ரேல் கடமைப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று இரவு முதல் 4 நாள்களுக்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கவுள்ளனர். அதுவரை காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படும்.

மேலும், நான்கு நாள்களுக்கு பிறகு கூடுதலாக விடுவிக்கப்பட்டும் ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளுக்கும் ஒருநாள் போர் நிறுத்தம் செய்யப்படும்.

அதேசமயம், அனைத்து பிணைக் கைதிகளை திரும்பப் பெறவும், இஸ்ரேலுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்கவும் மீண்டும் போர் தொடங்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com