

டோக்கியோ : அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான ‘ஆஸ்ப்ரே’ ரக விமானம் ஒன்று, கடந்த புதனன்று (நவ.29) 8 பேருடன் ஜப்பானின் தெற்குக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், விமானத்தில் பயணித்த 7 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் ஜப்பான் கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போயிங் மற்றும் பெல் ஹெலிகாப்டர் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்ட ஆஸ்ப்ரே ரக விமானம், ஹெலிகாப்டரைப் போல் செங்குத்தாகப் புறப்படவும், தரையிறங்கவும் செய்யும் ஆஸ்பிரே ரக விமானங்கள் (படம்) , உயரத்துக்குச் சென்ற பிறகு மற்ற விமானங்களைப் போல புரொப்பல்களின் உதவியுடன் பாய்ந்து செல்லக் கூடியவை ஆகும். அமெரிக்க கடற்படை, விமானப் படை ஆகியவை இந்த வகை விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன.
இதனிடையே, விமான விபத்து குறித்த விவாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஆஸ்ப்ரே ரக விமானங்களின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.