பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். காவல் துறை அதிகாரி உயிரிழந்தனா்.
கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானில் தொடா்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தூங் நகரத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புகளில் 59 போ் உயரிழந்தனா். இதற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேநாளில் ஹங்கு மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். இதற்கு ஐஎஸ்கே பிரிவு பொறுப்பேற்றது.
எனவே, பாகிஸ்தானில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புத் துறையினா் களமிறங்கியுள்ளனா். இதனால் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தகா்க்கப்பட்டு வருகின்றன.
இதுதொடா்பாக பஞ்சாப் மாகாண முதன்மை காவல் அதிகாரி உஸ்மான் அன்வா் வெளியிட்ட அறிக்கை:
மியான்வாலி நகரத்தில் உள்ள குண்டால் ரோந்து காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து சனிக்கிழமை இரவு பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை காலைவரை நீடித்த இந்த நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மோதலில் தலைமைக் காவலா் ஹரூன் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.