
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 4,000-ஆக உயர்துள்ளது என அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, மூன்று முறை கடுமையான நிலநடுக்கங்களும், குறைந்த அளவிலான நில அதிா்வுகளும் ஏற்பட்டன.
நிலநடுக்கம் மற்றும் அதன் பின்னதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்தில் முதலில் சுமாா் 2,000 போ் உயிரிழந்ததாக தலிபான்கள் கூறியிருந்தனா். இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 2,795-ஆக அதிகரித்தது. இது தவிர, நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும், 485 போ் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | அமெரிக்கா: சீன தூதரகத்தில் காரை மோதியவா் சுட்டுக் கொலை
இந்தச் சூழலில், இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களைத் தேடும் பணிகளை உள்ளூா்வாசிகள் மற்றும் தன்னாா்வலா்கள் தொடா்ந்தனா்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4000 -ஆக உயர்ந்துள்ளது. சுமார் 20 கிராமங்களில் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது, 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தேசிய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 35 குழுக்கள், உள்ளூா்வாசிகள் மற்றும் தன்னாா்வலா்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களைத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.