இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 900ஆக உயர்ந்த பலி!

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 900ஆக உயர்ந்த பலி!

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக்.7 முதல் போர் தொடர்ந்து வருகின்றது. தெற்கு இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஹமாஸ் படையினருடன் அந்நாட்டு ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். மேலும், காஸாவில் ஹமாஸ் படையினரின் நிலைகளைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 

திடீரென மூண்டுள்ள இந்தப் போரில் 260 குழந்தைகள் மற்றும் 230 பெண்கள் உள்பட 900 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 4,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், 6 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 15 பேர் 
காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் சுமார் 1,40,000-க்கும் அதிகமானோர் ,டம் பெயர்ந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட காஸா பகுதியில் மருந்துகள், மருத்துவ நுகர்பொருள்கள், ரத்த வங்கி விநியோகம், மின்சார ஜெனரேட்டர்கள், எரிபொருள் ஆகியவை தட்டுப்பாடு நிலவிவருவதால் அங்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

பற்றாக்குறை நிலவி வருவதால் காயமுற்றோர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உதவிக்கோரி மனிதாபிமான நிறுவனங்களுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com