போருக்கு முன், போருக்குப் பின்: இஸ்ரேல் படங்கள்!

இஸ்ரேல் மீது காஸா நடத்திய முதல்நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் ஏற்பட்ட சேதங்கள், போருக்கு முன் - போருக்குப் பின் என இரு படங்களாக இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. 
இஸ்ரேல்: போருக்கு முன் - போருக்குப் பின்
இஸ்ரேல்: போருக்கு முன் - போருக்குப் பின்


இஸ்ரேல் மீது காஸா நடத்திய முதல்நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் ஏற்பட்ட சேதங்கள், போருக்கு முன் - போருக்குப் பின் என இரு படங்களாக இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. 

போருக்கு முன்பு (அக்.6) இருப்பதை விட, காஸா தாக்குதல் நடத்திய அக்.7ஆம் தேதி மிகுந்த சேதங்களை இஸ்ரேல் சந்தித்துள்ளது. செயற்கைக்கோள் மூலம் இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பாலஸ்தீன் ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் தேதி காலை 6.30 மணியளவில் திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் 3 மணிநேரம் நீடித்த இந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. தொடர்ந்து 5,000 ராக்கெட்டுகளை செலுத்தி ஹமாஸ் படையினர் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். 2,500 ராக்கெட்டுகளைக் கொண்டு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 

இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் பகுதியிலிருந்து கட்டடங்கள் இடிந்து, குண்டுகளின் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. கரும்புகை சூழ்ந்து காணப்படும் இஸ்ரேல் புகைப்படத்தை அந்நாட்டு பாதுகாப்புத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com