

ஈரானில் ஹிஜாப் அணியாமல் மெட்ரோவில் பயணித்ததால், காவல் துறை தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி மூளைச் சாவடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
டெஹ்ரான் மெட்ரோ ரயிலில் ஹிஜாப் அணியாமல் பயணித்ததால், பெண் காவலர்கள் சிறுமியை ரயிலிலிருந்து குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றினர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரானில் ஆடைக் கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களின் விருப்பங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஹிஜாப் அணியாததால் காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மாஷா அமீனி என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மெட்ரோவில் ஹிஜாப் அணியாததால் அர்மிதா ஜெராவந்த் என்ற 16 வயது சிறுமி பயணித்துள்ளார். அவரை காவல் துறையினர் மெட்ரோவிலிருந்து வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி ரயிலிலிருந்து இறக்கியுள்ளனர்.
குறைந்த ரத்த அழுத்தம் உடைய இவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது அர்மிதா மூளைச்சாவு அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.