கத்தார்: 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை!

இந்திய போர்க் கப்பலின் முக்கிய அலுவலராகச் செயல்பட்டவர் உள்பட 8 பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கத்தார்: 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை!
Published on
Updated on
1 min read

முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவர்கள் மீது உளவு பார்த்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இந்திய வெளியுறவு துறை, இந்தத் தீர்ப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய போர்க் கப்பலின் முக்கிய அலுவலராகச் செயல்பட்டவர் உள்பட 8 பேர் கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்கனாலஜிஸ் & கன்சல்டன்ஸி சர்வீசஸ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்கள்.

இந்த நிறுவனம் கத்தாரின் ஆயுத படைகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கி வந்தது.

ஜாமீன் கேட்ட அவர்களது கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கத்தார் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 

“இந்தத் தீர்ப்பு குறித்து கேள்விப்பட்டதும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். முழுமையான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்களின் குடும்பத்துடனும் சட்ட குழுவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். சட்ட ரீதியில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இந்த வழக்கில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறோம். கத்தார் அதிகாரிகளுடனும் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்” என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com