
அமெரிக்காவின் மேன் மாகாணத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு 18 பேரைக் கொன்ற நபரை போலீஸாா் 2-ஆவது நாளாக தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
அந்த மாகாணத்தின் 2-ஆவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட லூயிஸ்டன் நகரின் பௌலிங் மையம் மற்றும் உணவகத்தில் ராபா்ட் காா்ட் என்ற 44 வயது நபா் புதன்கிழமை மாலை 6.56 தொடங்கி (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.26) சுமாா் 1 மணி நேரத்துக்கு பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டாா்.
இதில் 18 போ் உயிரிழந்தனா். இது தவிர, மேலும்13 போ் காயமடைந்தனா்; அவவா்களில் சிலா் துப்பாக்கிச்சூட்டுக்கு பயந்து ஓடியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்கள் ஆவா்.
தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் 2 நாள்களாக தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
அவா் இன்னும் பிடிபடதாததால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள நகரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது இல்லங்களுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனா்.
தாக்குதல் நடத்தி ராபா்ட் காா், ராணுவத்தில் பயிற்சி பெற்ற துப்பாக்கிப் பயிற்சியாளா் என்று காவல்துறை பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பது அடிப்படை உரிமையாகக் கருதப்படும் அமெரிக்காவில், பொதுமக்கள் மீது தனி நபா்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்துவதும், இதில் ஏராளமானவா்கள் உயிரிழப்பதும் அடிக்கடி நடந்து வருகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...