
கோப்புப்படம்
மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
மியான்மரில் இன்று காலை 10.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 25 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
படிக்க: ஒற்றுமை நடைப்பயணம் உடைந்த மனசாட்சியை கட்டியெழுப்புவதற்கான முயற்சி: கார்கே
முன்னதாக, ஆகஸ்ட் 21-ம் தேதி 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது .
மியான்மரை தொடர்ந்து தென் அமெரிக்க நாடான சிலியிலும் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது.
இந்த நிலநடுக்கம் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் இருந்து தென்-தென்மேற்கே 41 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாக பதிவானது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...