இரட்டைக் குழந்தைகளுடன் எலான் மஸ்க்! முதன்முதலில் வெளியான குடும்பப் படம்!

எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஆசிரியர் வால்டர் ஐசக்சன் வெளியிட்டுள்ள படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இரட்டைக் குழந்தைகளுடன் எலான் மஸ்க்! முதன்முதலில் வெளியான குடும்பப் படம்!

எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஆசிரியர் வால்டர் ஐசக்சன் வெளியிட்டுள்ள படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில், தொழிலதிபரான எலான் மஸ்க்,  இரட்டைக் குழந்தைகள் மற்றும் அவரின் தாயார் ஆகியோர் உள்ளனர். எலான் மஸ்க் தனது இரட்டைக் குழந்தைகளுடன் இருப்பதைப்போன்று வெளியாகியுள்ள முதல்படம் இதுவாகும்.

எலான் மஸ்க்கின் பிரெயின் சிப் தயாரிப்பு நிறுவனமான நியூராலிங்க்கின் தலைமை செயல் அதிகாரி  ஷிவோன் ஸிலிஸ் ( Shivon Zilis) வீட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஷிவோனுக்கும் எலான் மஸ்க்கிற்கும் 2021 நவம்பர் மாதம் இரட்டைக் குழந்தை பிறந்தது. 

இவர்களின் புகைப்படங்கள் இதுவரை வெளிவராத நிலையில், தற்போது இரட்டைக் குழந்தைகள் மற்றும் அவரின் தாய் ஷிவோன் ஸிலிஸுடன் எலான் மஸ்க் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு மூன்றுமுறை விவாகரத்தாகியுள்ளது. அவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com