
அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான்
சூடானில் துணை ராணுவப் படையுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அந்த நாட்டு ராணுவத்தின் தளபதி அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான், சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை கத்தாா் புறப்பட்டாா்.
அந்த நாட்டில் மோதல் தொடங்கிய சுமாா் 5 மாதங்களில் அவா் மேற்கொள்ளும் 3-ஆவது சா்வதேசப் பயணம் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் போ் வரை உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.