நியூயார்க் சீர்திருத்த துறையின் மீது ஆறு சிறைக்கைதிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
திங்கள்கிழமை ஏற்படவுள்ள முழு சூரிய கிரகணத்தின்போது சிறைச்சாலையின் அறைகளை அடைத்து வைக்கும் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சிறைக்கைதிகளுக்கான மத நம்பிக்கையை பின்பற்றுவதற்கான அடிப்படை உரிமைகளை மறுப்பதாக இந்த அறிவிப்பு இருப்பதாக அவர்களின் சார்பாக வழக்குத் தொடுத்த வழக்குரைஞர்கள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கு திரும்ப பெறப்பட்டதாகவும் அவர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றவுள்ளதாகவும் சிறை துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு கடக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதன் பேரில் பல்வேறு மத நம்பிக்கைகள் நிலவுகின்றன. அந்த சமயங்களில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொருவிதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் துறையின் ஆணையர் டேனியல் நியூயார்க் சிறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சூரியகிரகணத்தின்போது பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சிறை கைதிகள் உள்ளே இருக்குமாறும் அவர்கள் கிரகணத்தை காண பிரத்யேக கண்ணாடிகள் உள்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வழக்கமாக இந்த நேரம் கைதிகள் வளாகத்தில் உலாவும் நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.