பள்ளி மாணவர்களுடன் பாலுறவு... 14 வயது சிறுமியாக நடித்த 23 வயது இளம்பெண்!

23 வயதான இவர், பள்ளி மாணவர்களுடன் பாலுறவு கொள்வதற்காக 14 வயது பள்ளி மாணவியைப் போன்று நடித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுடன் பாலுறவு... 14 வயது சிறுமியாக நடித்த 23 வயது இளம்பெண்!

பள்ளி மாணவர்களுடன் பாலுறவுகொள்ளும் நோக்கத்தில், 14 வயது சிறுமியாக நடித்த 23 வயது இளம்பெண்ணை அமெரிக்க காவல் துறையினர் கைது செய்தனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் டாம்பா நகரைச் சேர்ந்தவர் அல்யீஸ்ஸா அன் ஸிங்கர். 23 வயதான இவர், பள்ளி மாணவர்களுடன் பாலுறவு கொள்வதற்காக 14 வயது பள்ளி மாணவியைப் போன்று நடித்துள்ளார்.

ஸ்நாப் சாட் என்னும் சமூகவலைதள செயலியில் பள்ளி மாணவியைப் போன்ற தோற்றத்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். அதோடு அச்செயலியில் தனிப்பட்ட சில விடியோக்களையும் அனுப்பி மாணவர்களிடம் பாலுணர்வைத் தூண்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட 4 பள்ளி மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை புகாரளிக்க முன்வந்ததைத் தொடர்ந்து தற்போது டாம்பா நகர காவல் துறையினர் இளம் பெண்ணை கைது செய்துள்ளனர்.

12 முதல் 15 வயதுக்குட்ட மாணவருடன் தகாத உறவு வைத்திருந்ததற்காக இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். 7,500 டாலர்களை அபராதமாகச் செலுத்தி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

இதனிடையே பள்ளி மாணவர்களுடன் பாலுறவு கொள்ள சமூக வலைதள செயலியில் 14 வயது மாணவியாக நடித்ததற்காக மீண்டும் காவல் துறையினர் இளம்பெண்ணைக் கைது செய்தனர்.

மாணவர்களிடையே தகாத முறையில் பேசியது, ஆபாச விடியோக்களை அனுப்பியது, துன்புறுத்தியது, உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் இவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக பேசிய டாம்பா நகர காவல் துறை தலைமை அதிகாரி லீ பிரிகவ், இளம்பெண் ஒருவர் குழந்தை பருவத்தை சாதமாக பயன்படுத்தி மாணவர்களை இரையாக்குவது கவலையளிக்கிறது. ஸிங்கரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என காவல் துறை விரும்புகிறது. இதில் தனிப்பட்ட முறையில் பிரச்னைகள் ஏற்படாதவாறு காவல் துறை உங்களைப் பாதுகாக்கும் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com