எப்படியிருக்கிறது துபை? புகைப்படங்களும் விடியோக்களும்

எப்படியிருக்கிறது துபாய்? புகைப்படங்களும் விடியோக்களும் வெளியாகியுள்ளன.
துபையில் மழை
துபையில் மழைJon Gambrell
Published on
Updated on
2 min read

ஐக்கிய அரபு நாடுகளில் பெய்த கனமழை காரணமாக, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு துபை உள்ளிட்ட நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

image-fallback
இன்று மாலை 6 மணிக்குள் தோ்தல் பிரசாரங்களை முடிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு
Jon Gambrell

துபையில் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வெள்ளத்தில் ஆங்காங்கே கார்கள் சிக்கி நிற்கும் விடியோக்கள் வெளியாகியுள்ளன.

துபை சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 75 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jon Gambrell

திங்கள்கிழமை இரவு மழை பெய்யத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை மாலை வரை 142 மி.மீ. வரை மழை பதிவாகியிருக்கிறது. பாலைவன பூமியான துபையில் பொதுவாக இவ்வளவு மழை பெய்யாத என்பதால், அங்கு மழை நீர் வடிகால் அமைப்புகள் பெரிய அளவில் செய்யப்பட்டிருக்காது என்பதே நிலைமை மோசமானதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட ஓராண்டில் பெய்ய வேண்டிய 100 மி.மீ. மழையும் ஒரு சில நாள்களில் பெய்துமுடித்திருக்கிறது. பெரும்பாலான இடங்களில் முட்டியளவுக்கு தண்ணீர் நிற்கிறது.

காவல்துறையினரும் மீட்புப் படையினரும் பொதுமக்களுக்கு உதவும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jon Gambrell

மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வீட்டிலிருந்தே பணி செய்யுமாறு பல நிறுவனங்கள் ஊழியர்களை அறிவுறுத்தியிருக்கிறது. சாலைகளிலும், குடியிருப்பு வளாகங்களிலும் கார்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் புகைப்படங்கள வெளியாகியுள்ளன.

Jon Gambrell

உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபை விமான நிலையம் பல சர்வதேச விமானங்களை திசைதிருப்பி விட்டுள்ளது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com