உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ எது தெரியுமா?
உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

இன்று யூ-டியூப் மூலம் மக்கள் ஆயிரக்கணக்கான விடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகிலேயே முதல் யூடியூப் விடியோ எடுக்கப்பட்டது குறித்த விவரம் இன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மிக அண்மையில்தான் யூடியூப் விடியோக்கள் புகழ்பெற்றன. அதன் மூலம் பலரும் கோடீஸ்வரர்களாகவும் மாறினர். ஆனால், இந்த யூடியூப் முதல் விடியோ வெளியானது 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதியாம்.

ஆம்.. மிகச் சரியாக 19 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. முதல் யூடியூப் வெளியானதன் 19ஆம் ஆண்டு நிறைவு நாள் மற்றும் 20ஆம் ஆண்டு துவக்க நாளும் இன்றுதான்.

இந்த விடியோ வெறும் 18 வினாடிகள்தான் ஓடியிருக்கிறது. அதில், யூடியூப் நிறுவனர் ஜாவேத் கரிம், சான் டியாகோ உயிரியல் பூங்காவில், யானைகள் கூட்டத்தின் முன் நின்று கொண்டு, நான் உயிரியல் பூங்காவில் இருக்கிறேன் என்று விடியோ எடுத்துஅதனை யூடியூப்பில் பகிர்ந்திருக்கிறார்.

இந்த விடியோதான் உலகின் முதல் யூடியூப் விடியோவாக இன்று பிரபலமடைந்திருக்கிறது.

இதனை ஒரு பொது விடியோ தளத்தில் பதிவு செய்து அப்லோடு செய்து அதற்கு யூடியூப் என்று பெயரிட்டிருக்கிறார்கள். நண்பர்கள் ஒன்று சேர்ந்து விளையாட்டாக தொடங்கிய அந்த தளம் இன்று வரலாறாக மாறியிருப்பது அனைவருக்கும் தெரிந்த மிச்சக் கதைதான்.

இவர்கள் தொடர்ந்து சின்ன சின்ன விடியோக்களை, தங்களது வாழ்நாளில் நடப்பதை பதிவு செய்து விடியோக்களாகப் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, அதனை கூகுள் வாங்கிக் கொள்கிறது. அதாவது 2006ஆம் ஆண்டு 1.65 பில்லியன் டாலர்களுக்கு.

வெறும் இரண்டு ஆண்டுகளே ஆன ஒரு நிறுவனத்தை கூகுள் இந்தப் பணத்தைக் கொண்டு வாங்கியிருப்பது என்றால், அது 20 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் நிச்சயம் அது மிகப்பெரிய தொகைதான். அப்போது அது குறித்து செய்தி ஒன்று கார்டியனிலும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com