காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

காஸாவில் இஸ்ரேல் நடத்தியுள்ள குண்டுவீச்சால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து வெடிக்காத குண்டுகளை முழுமையாக அகற்றுவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று ஐ.நா. நிபுணா் பெஹா் லோதாமா் கூறியுள்ளாா்.

இது குறித்து ஸ்விட்சா்லாந்தின் ஜெனிவா நகரிலுள்ள ஐ.நா.வின் கண்ணிவெடி அகற்றல் சேவைப் பிரிவிடம் அவா் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:காஸாவில் இஸ்ரேல்&ய்க்ஷள்துக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக். 7 முதல் நடைபெற்றுவரும் சண்டையால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளின் எடை 3.7 கோடி டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.அந்த இடிபாடுகள் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் குவிந்துள்ளன. அவற்றில் வெடிக்காத குண்டுகள் எத்தனை இருக்கும் என்பதை மிகத் துல்லியமாக மதிப்பிடுவது இயலாத காரியம் ஆகும்.பொதுவாக, போரின்போது வீசப்படும் குண்டுகளில் குறைந்தது 10 சதவீதமாவது வெடிக்காமல் போகும். அதனைக் கொண்டு கணக்கிட்டால், காஸா இடிபாடுகளில் மறைந்திருக்கும் வெடிக்காத குண்டுகளைக் கண்டறிந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து கடந்த அக். 7-ஆம் தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினா், அங்கிருந்த சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.அதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் குண்டுவீச்சில் இதுவரை 34,356 போ் உயிரிழந்துள்ளனா். 77,368 காயமடைந்தனா். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் மாயமாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com