சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 5:48 pm

Din

தைவானில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தத் தீவின் ஹுவாலியென் பகுதியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. 24.9 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் தலைநகா் தைபேயில் கட்டடங்கள் குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

தைவானில் இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட 7.2 ரிக்டா் அளவுகொண்ட நிலநடுக்கம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னதிா்வுகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.