இஸ்ரேல் ஈரான் இடையே போர் மூளும் அபாயம்! ஜி7 நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை

இஸ்ரேல் மீது ஈரானும் ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்த ஆயத்தமாகியிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை..
இஸ்ரேல் ஈரான் இடையே போர் மூளும் அபாயம்! ஜி7 நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை
Published on
Updated on
1 min read

இஸ்லாமிய நாடான ஈரானும், அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையால், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போா் மத்திய கிழக்கு பிராந்திய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும் ஹிஸ்புல்லாவும் திங்கள்கிழமை(ஆக. 5) தாக்குதல் நடத்த ஆயத்தமாகியிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டின் முக்கிய உளவு அமைப்புகளான மொசாட் மற்றும் ஷின் பெட்டின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் காலண்ட் மற்றும் அந்நாட்டின் பதுகாப்புப் படைத் தளபதி ஹெர்ஸி ஹலேவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல் ஈரான் இடையே போர் மூளும் அபாயம்! ஜி7 நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்

இந்த நிலையில், ஜி7 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொடர்புகொண்டு பேசியுள்ள ஆண்டனி பிளிங்கன், மத்திய கிழக்கு பிராந்திய கள நிலவரம் குறித்தும் போர் மூளாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது குறித்தும் ஆலோசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானின் புதிய அதிபா் மசூத் பெஷஸ்கியான் டெஹ்ரானில் கடந்த செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா். அந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் உச்சபச்ச தலைவராகக் கருதப்படும் இஸ்மாயில் ஹனீயேவும் பங்கேற்றாா். இந்த நிலையில், அவா் தங்கியிருந்த கட்டடத்தில் கடழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இஸ்மாயில் ஹனீயே உயிரிழந்தாா். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.

இருந்தாலும், அவரைக் குறிவைத்து இஸ்ரேல்தான் அந்தத் தாக்குதலை நடத்தியதாக உறுதியாக நம்பப்படுகிறது.தங்கள் நாட்டில் ஹமாஸ் தலைவரைப் படுகொலை செய்த ஈரானுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கும், லெபனான் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உள்பட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com