ஷேக் ஹசீனாவுக்கு இப்படி நடக்கும் என முன்பே கணித்திருந்தாரா ஜோதிடர்?

ஷேக் ஹசீனாவுக்கு இப்படி நடக்கும் என 2023ஆம் ஆண்டு ஜோதிடர் ஒருவர் கணித்ததாக தகவல்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
Published on
Updated on
2 min read

உலகமே வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவலையோடு கவனித்து வரும் நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டே, இவ்வாறு நடக்கும் என்று ஜோதிடர் ஒருவர் கணித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேசத்தில் மாணவர்களின் தீவிர போராட்டம், வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். நாட்டைவிட்டு வெளியேறி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்கு வந்த அவர், பிரிட்டனில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமையாக இருந்த வங்கதேசத்தில், கடந்த வாரம் போராட்டம் நடக்கும்வரை, இப்படி நாட்டின் ஜனநாயக ஆட்சியே முடிவுக்கு வரும் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பிரசாந்த் கினி என்ற ஜோதிடர், ஷேக் ஹசீனாவுக்கு ஆபத்து நேரிடும் என்றும், அவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் முன் கணித்திருந்து எச்சரிக்கையும் விடுத்திருந்ததாகத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வங்கதேசத்தில்
வங்கதேசத்தில்Rajib Dhar

அதாவது, 2024ஆம் ஆண்டு மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், ஷேக் ஹசீனா எச்சரிக்கையாக இருக்க வேண்டும், படுகொலை முயற்சிகள் நிகழலாம் என்று அவர் அந்த எச்சரிக்கையில் நேரடியாகவே குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது அவரையும், அவரது முன் கணிப்பையும் யாரும் கவனிக்காமல் இருந்திருக்கலாம். இப்போதும் அவர் முன் கணித்திருந்தது யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், கணித்தவருக்குத் தெரியுமே. அவர் தனது முன் கணிப்பு குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை தற்போது ரிடிவீட் செய்துள்ளார். இதன் மூலம், இவரது முன்கணிப்பு உலகத்துக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். சிலர், அவரைப் புகழ்வதை விட்டுவிட்டு, நாட்டில் இயற்கைப் பேரிடர் போன்றவற்றை முன்கணித்து மக்களுக்குத் தெரிவித்து உயிர்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

என்னதான் நடந்தது வங்கதேசத்தில்?

அரசுப் பணிகளில், வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்து கடந்த வார இறுதியில் உண்டான போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்தச் சூழலில், நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட முடியாமல் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தார். இந்தத் தகவலை ராணுவ தலைமைத் தளபதி வாக்கர்-உஸ்-ஸமான் உறுதி செய்திருந்தார்.

தற்போது அவர் இந்தியா வந்துள்ளார். அவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் தஞ்சமடைய உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com