பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பல்முனைப் போருக்கு தயாரான இஸ்ரேல்! பாலஸ்தீனர்கள் 4 பேர் பலி

பாலஸ்தீனர்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலி

News image
மேற்கு கரை பகுதியில் சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதலில் சேதமடைந்துள்ள வாகனம் - படம் | ஏபி
Updated On :6 ஆகஸ்ட் 2024, 7:45 am

DIN

ஜெருசலேம்: பாலஸ்தீனர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் படைகள் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன. இந்த தாக்குதல்களில் 14 வயது சிறுவன் உள்பட மொத்தம் 4 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் இன்று(ஆக. 6) தெரிவித்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா படை, இஸ்ரேலின் வடக்குப் பிராந்தியங்களில் திங்கள்கிழமை(ஆக. 5) டிரோன் மூலம் தாக்குதல்களைத் தொடுத்ததாகவும், இந்த தாக்குதல்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஸா மீதான போர் ஆரம்பமானதிலிருந்து, மேற்கு கரையில் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் இதுவரை 600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1967-ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரின்போது, பாஸ்தீனர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் காஸா, மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை இஸ்ரேல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட பிராந்தியங்களை விடுவிக்கக்கோரி பாலஸ்தீனர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பின் உச்சபச்ச தலைவராகக் கருதப்படும் இஸ்மாயில் ஹனீயே ஈரானில் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இஸ்ரேல்தான் அந்தத் தாக்குதலை நடத்தியதாக உறுதியாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கும், லெபனான் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை நடத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது. பல்முனைப் போருக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும் ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்த ஆயத்தமாகியிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.