வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர் என 29 பேர் கொலை

வங்கதேசத்தில் போராட்டக்காரர்களால் அவாமி லீக் கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர் என 29 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச வன்முறை
வங்கதேச வன்முறைFATIMA TUJ JOHORA
Published on
Updated on
1 min read

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டம் நின்றபாடில்லை. அங்கிருக்கும் மத சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது கடுமையான தாக்குதல் அரங்கேறி வருகிறது.

வங்கதேச வன்முறைக்கு இதுவரை 440 பேர் பலியாகியிருக்கிறார்கள். வங்கதேச அதிபர் முகமது, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, நோபல் பரிசு பெற்ற 84 வயது முகமது யூனுஸ், அடுத்த இடைக்கால அரசுக்கு தலைவராக இருப்பார் என்று அறிவித்திருந்தார்.

வங்கதேசத்தில் இருந்த ஏராளமான இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்து மக்கள் வாழும் வீடுகள், தொழிற்சாலைகள் சேதப்படுத்தப்பட்டன.

அது மட்டுமல்லாமல், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இரண்டு இந்து மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கடந்த இரண்டு நாள்களில் மட்டும், அவாமி லீக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என இதுவரை 29 உடல்களை, வங்கதேச அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டாக்காவிலிருந்து 6 குழந்தைகள் உள்பட 205 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். செவ்வாயக்கிழமை புது தில்லியிலிருந்து டாக்காவுக்குச் சென்ற சிறப்பு விமானம், அங்கிருந்து 205 பேரை பத்திரமாக தாயகம் அழைத்து வந்தது.

மேலும், தில்லி - டாக்கா இடையே வழக்கமாக இயக்கப்படும் விமானங்களை ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ ஆகியவை இயக்கத் தொடங்கின. நேற்று காலை விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், மாலை நேர விமானத்தை ஏர் இந்தியா இயக்கியிருந்தது.

சென்னையில் இருந்து வங்கதேசத்துக்கு இன்று மீண்டும் விமான சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வங்கதேசத்துக்கு இன்று முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com