
நேபாளத்தில் நுவாகோட் மாவட்டத்தில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்திற்கு உள்பட்ட சிவபுரி பகுதியில் புதன்கிழமை மதியம் நேரிட்ட ஏர் டைனாஸ்ட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சியாபுருபென்ஸி செல்லும் போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரிவந்துள்ளது. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், மூத்த கேப்டனான விமானி அருண் மல்லாவால் இயக்கப்பட்டது. விமானம் பறக்கத்தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் அலுவலக ஊழியர்களுடனான தகவல் துண்டிக்கப்பட்டது.
விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்தாகவும் அதில், விமானி மற்றும் சீனத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனத்தைச் சேர்ந்தவர்கள் ரசூவாவுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகவும் உள்ளூர் செய்திகளில் வெளியாகியுள்ளன.
ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 1.54 புறப்பட்டதாக திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஆதாரங்களை உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. சூர்யாசவுரை அடைந்த பிறகு, ஹெலிகாப்டர் சுமார் 1.57 மணிக்கு அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது.
தளத்தில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், 5 பயணிகளும், விமானியும் விபத்தில் பலியாகியுள்ளனர்.
இதே போன்று ஜூலை 24 ஆம் தேதி 19 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம், திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது, திடீரென சறுக்கி விபத்தில் சிக்கியதில் 18 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.