
வங்கதேச நிலைமையை கண்காணிக்கவும் அங்குள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
வங்கதேசத்தில் உள்ள அதிகாரிகளுடன் இந்த குழு தொடர்பில் இருக்கும் என்றும் எல்லையில் உள்ள பாதுகாப்பை இந்த குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இதையடுத்து வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் முகம்மது ஷஹாபுதீன் அறிவித்தார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் நேற்று(ஆக. 8) இரவு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் முழுமையான அமைதி நிலவும்வரை அங்குள்ள நிலைமையைக் கண்காணிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்திய-வங்கதேச எல்லையை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை(கிழக்கு) கூடுதல் இயக்குநர் ஜெனரல் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தெற்கு வங்காளம், திரிபுரா பகுதியின் எல்லை பாதுகாப்புப் படைத் தலைவர், இந்திய துறைமுக ஆணையத்தின் செயலாளர் மற்றும் திட்ட வளர்ச்சிக்குழுவின் உறுப்பினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள அதிகாரிகளுடன் இந்த குழு தொடர்பில் இருக்கும் என்றும் எல்லையில் உள்ள பாதுகாப்பை இந்த குழு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த குழுவின் மூலமாக வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.