
ஒலிம்பிக் பேரணியில் கலந்துகொண்ட அமெரிக்கப் பாடகர் டிராவிஸ் ஸ்காட், ஹோட்டல் பாதுகாவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.
ஒலிம்பிக் ஆண்கள் கூடைப்பந்து அரையிறுதியில், செர்பியாவுக்கு எதிரான அமெரிக்கப் பேரணியில் கலந்து கொள்ள, ராப்பரும் பாடகருமான டிராவிஸ் ஸ்காட், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாரிஸின் ஜார்ஜஸ் வி சொகுசு ஹோட்டலில் டிராவிஸ் தங்குவதற்காகச் சென்றுள்ளார். இந்த நிலையில், டிராவிஸுக்கும் அவரது மெய்க்காப்பாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தைத் தடுக்க, ஹோட்டலின் பாதுகாவலர் முன்வந்துள்ளார். ஆனால், ஹோட்டல் தடுக்கச் சென்ற பாதுகாவலருக்கும் டிராவிஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹோட்டலில் ரகளையில் ஈடுபடுவதாகக் கூறி, டிராவிஸ் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஹோட்டலுக்கு விரைந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் டிராவிஸைக் கைது செய்தனர்.
இருப்பினும், டிராவிஸ் ரகளை செய்ததன் காரணம் குறித்த தகவல்களைக் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.
புளோரிடாவில் ஒரு படகில் இடையூறு செய்ததாகக் கூறி, டிராவிஸ் ஸ்காட் கடந்த ஜூன் மாதத்தில் போதைப்பொருள் உபயோகித்தல் மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.